யாழ்ப்பாணம் – இணுவில், காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பை கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
காரைக்கால் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


