சேருநுவரயில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர் இன்று(10) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று பூநகர் கிராமத்தைச் சேர்ந்த 57 வயதுடைய, 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த நபர் மேய்ச்சலுக்குச் சென்ற தனது மாட்டினை தேடிச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *