மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இன்று(11) இடம்பெற்றது.
இக் கூட்டமானது இன்று பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே முரளிதரனின் ஒருங்கமைப்பில் இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையின் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சட்டவிரோத மண்அகழ்வு, காட்டு யானை தாக்கம், டெங்கு நோயின் தாக்கம், அரசாங்கத்தின் சத்துணவு திட்டம், வீடமைப்பு திட்டங்கள், போக்குவரத்து மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் இங்கு எடுக்கப்பட்டது.
முன்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த அருண் ஹேமச்சந்திரவின் அமைச்சின் வேலைப்பளு காரணமாக மாவட்டத்திற்கு புதிய மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக அமைச்சர் ஹந்துன்நெத்தி நியமிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


