ஜனாதிபதியின் விருப்பத்துக்கு ஏற்ப மட்டக்களப்புக்கும் சம அபிவிருத்தி வழங்குவேன்- சுனில் ஹந்துநெத்தி

மட்டக்களப்பு மாவட்டத்தை ஜனாதிபதியின் விருப்பத்தைப் போல ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை வேறுபாடு இன்றி எனது காலத்தில் முன்னெடுப்பேன் என அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்

இன்று(11) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த காலத்தில் கிழக்கு மாகாண மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஜனாதிபதியின் இந்த நியமனம் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

கடந்த காலத்தில் நானும் ஆளுநரும் மாவட்டத்தில் தனியாக தேர்தல் கால சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம். இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன்.

இங்கு சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி என்பனவற்றை கட்டி எழுப்ப வேண்டிய தேவை உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *