வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

நிலைபேறான கூட்டுறவு மேம்பாட்டிற்கான புதிய வழியைத் தொடங்குதல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(12) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலானது கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர், மாகாண கூட்டுறவு ஆணையாளர், ஐந்து மாவட்டங்களின் கூட்டுறவு உதவி ஆணையாளர்கள், கூட்டுறவு துறைசார் சார் உத்தியோகத்தர்கள் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், கூட்டுறவுத்துறை சார்ந்தோர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *