நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி நள்ளிரவு முதல் நிறுத்தப்படும்

பராமரிப்புப் பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதல் மின் பிறப்பாக்கி இன்று(13) நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் பராமரிப்புப் பணிகள் நிறைவடைய 25 நாட்களாகும் என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

அந்த மின் பிறப்பாக்கியை முடக்குவதன் மூலம் தேசிய அமைப்பு 300 மெகாவாட் மின்சார திறனை இழக்கும்.

இதேவேளை, பராமரிப்பு காரணமாக சுமார் ஒன்றரை மாதங்களாக செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையம் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

இதில், 165 மெகாவாட் மின்சாரத் திறன் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும்.

தற்போதைய மழையுடனான காலநிலையுடன் நீர் மின் உற்பத்திக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதால், மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *