அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 2.2% குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் உள்ள நாணயத்தின் அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கியில் வைத்திருக்கும் வணிக வங்கிகளின் வைப்புத்தொகை அதிகரிப்பு ஆகியவற்றால், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது இருப்பு பணம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தனது வாராந்திர பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினத்திற்கான நிலவரப்படி, மொத்த நிகர சந்தை பணப்புழக்க பற்றாக்குறை ரூ. 187.53 பில்லியனாக இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *