காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை- வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்  ஊடக சந்திப்பு இன்று(15) நடைபெற்றது.
இன்று பகல்  10 மணிக்கு கிளிநொச்சியில் அவர்களது அலுவலகத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி கலந்து கொண்டு குறித்த ஊடக சந்திப்பபை  நடத்தியுள்ளார்.
இவ் ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும் அதற்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கு இது இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அம்பாறை தம்பிலுவில் மத்திய சந்தைப் பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு அதன் தலைவிக்கு மக்களின் வாக்குகளைப் பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அலுவலகத்தை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை(16) காலை அம்பாறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து குறிப்பிடுகையில் நடைபெறவுள்ள ஐநா கூட்டத் தொடரிலே தங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துவதுடன் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா பிரதிநிதியிடம்  காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் தொடுவாய் மன்னார்  போன்ற புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும் என்றும் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *