மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது.
இதன் தவிசாளராக முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் இன்று(16) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டவர். இன்று அவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தமது ஆதரவினைத் தெரிவித்து அதனுடன் இணைந்து தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார். இதன்போது 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
கோறளைப்பற்று மேற்கு பிரதேசபை மண்டபத்தில் இன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.முகமட் அஸ்மி முன்னிலையில் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு நடைபெற்றது.
குறித்த சபைக்கு 19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்று சபையில் ஐக்கிய மக்கள் சக்தியில் 08 உறுப்பினர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் 06 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியில் 02 உறுப்பினர்களும், இலங்கை தமிழ் அரசு கட்சியில் 01 உறுப்பினரும், சுயேட்சைக்குழுவில் 01 உறுப்பினரும் என 19 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
தவிசாளர் தெரிவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முகமட் கனீபா முகமட் பைருஸ் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக எம்எம்.எஸ்.எம். கலாட்டீன் உதவி தவிசாளருக்கு முன்மொழியப்பட்ட நிலையில் அக்கட்சிகளின் ஆதரவுடன் 9 மற்றும் 8 எனும் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகட் கனீபா முகமட் பைருஸ் தவிசாளராக தெரிவானார்.
இதே அடிப்படையில் பிரதி தவிசாளராக அப்துல் கமீது நுபைர் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரு உறுப்பினர் சபைக்கு கலந்துகொள்ளவில்லை. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், எம்.எல்.எம். ஹிஸ்புல்லா மற்றும் ஏறாவூர் நகரசபை தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

