பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக வின்சன்ட் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளைப் பெறறு வெற்றி பெற்றார்.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி. சந்திரசேகரனும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போலும் முன்மொழியப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதில் 7/3 என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி தேவராசேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

