கிளிநொச்சியில் கரோலஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணி ஆரம்பித்து 13வருடங்கள் நிறைவு

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கரோலஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியை ஆரம்பித்து 13வருடங்கள் நிறைவு தினமும் கரோலஸ் நிறுவனத்தில் 20வருடங்களுக்கு மேலாக  அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் பணியாளர்களையும் கெளரவிக்கும் நிகழ்வும் கரோலஸ் முகமாலை அலுவலகத்தில் இன்று(18) நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது கரோலஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பீட்டர் ஹக் ஸ்காட் பேக்கர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் க. சிறீமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகமாலைப்பகுதியில் அகற்ற வேண்டிய 10.5 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் 6 சதுர கிலோமீற்றர் கண்ணிவெடியை அகற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *