ஏறாவூர் நகரசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இன்று(18) பதவியேற்றனர்.
ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம், பிரதி தவிசாளர் ஞானசேகரம் கஜேந்திரன், ஏறாவூர் நகரசபையின் உறுப்பினர்களான ஏ.எம் அஸ்மி, ஏ.எம் உவைஸ் அல் ஹபீழ், எஸ்.எம் ஜப்பார், எம்.ஐ.ஏ நாஸர், சுப்பிரமணியம் ரகுபரன் மற்றும் அசனார் சுபைதா உம்மா ஆகியோர் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் முன்னிலையில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா துரைரெட்ணம், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எஸ். சர்வாணந்தம் மற்றும் உறுப்பினர் எம்.எஸ்.எம். ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

