விரைவில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும்- பத்மநாதன் மயூரன்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நிலவிவரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக விரைவில் காரைமுனங்கு இந்து மயானத்திற்கு அருகில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார்.

 

நல்லூர் பிரதேச சபை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மிக நீண்ட காலமாக செய்யப்பட்டுவந்த திண்மக் கழிவகற்றல் பொறிமுறைக்கு பொருத்தமான இடம் இல்லாத காரணத்தால் தற்போது சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

 

தற்சமயம் அதற்கான தீர்வாக மாற்றிடமொன்றுக்கு சுற்றுச்சூழல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மாவட்ட செயலாளர் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளரின் முயற்சியால் இதற்கான அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *