இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் கைது

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணல் கடத்தல் தொழிலை தடையின்றி மேற்கொள்ளவும், இந்தக் கடத்தல் தொடர்பில் சட்டபூர்வமாக செயற்படாதிருக்கவும் ஒருவரிடமிருந்து ரூ. 25,000 பெற முயன்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *