திருகோணமலையில் ஐ. நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் விஜயத்தை முன்னிட்டு போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(25) திருகோணமலையில் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக காலை 8.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று திருகோணமலை மாவட்டத்திற்கு வருகை தந்த ஐ. நா. சபையின் மனித உரிமை உயர் ஆணையாளர் கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற சிவில் அமைப்புப் பிரதி நிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆகியோரை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இதன் போது இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் ஆணையாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *