யாழில் கடலிற்கு சென்றவர் இதுவரை கரை திரும்பவில்லை; தேடும் பணி தீவிரம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இதுவரை கரை திரும்பவில்லை.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இவர் இன்று(26) அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடித் தொழிலிற்காக சென்றுள்ளார். வழமையாக 9:00 மணியளவில் கரை திரும்பும் இவர் கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்ற வேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.
இதனை அவதானித்த தேடிச்சென்ற மீனவர்கள் கடலட்டைத் தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேசகத்தில் மணல்காடு மீனவர்கள் தற்போது பல படகுகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *