நாகப்பட்டின கடற்றொழிலாளர் குழு மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற, தமிழகம், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் குழு, இலங்கையின் கடற்கொள்ளையர்களால் நடுக்கடலில் தாக்கப்பட்டதாக, தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

அத்துடன், அவர்களின் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, செய்தி வெளியாகியுள்ளது.

 

இந்த சம்பவம் நேற்று(26) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை தரப்பிலிருந்து இன்னும் கருத்துகள் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *