வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் கடமையைப் பொறுப்பேற்பு

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்புக் கட்சி சார்பில் தவிசாளராக தெரிவாகிய கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் இன்று(27) தமது கடமையைப் பொறுப்பேற்றார்.

 

ஆலய வழிபாட்டடினைத் தொடர்ந்து தவிசாளர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம் பிரதேச சபைக்கு வருகை தந்தார்.

 

அவரை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

 

சுப நேரத்தில் உத்தியோகப்பூர்வமாக அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

 

பின்னர் சபையின் செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்ட   ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொண்டு சபையானது தமது நிர்வாக காலப் பகுதியில் வாகரை பிரதேச மக்கள் தொடர்பான அபிவிருத்திப்பணிகள் மற்றும் நிர்வாக செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

 

தவிசாளருக்கு சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *