முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக இறக்காமம் பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது ஆசிக்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அவருடைய கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

