வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதி அந்நூர் அகடமி அருகில் இன்று(28) காலை சிறிய ரக லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழுப்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியே இவ்வாறு விபத்தில் சிக்கியது.
லொறியின் டயர் வெடித்ததில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் லொறியை வீதியிலிருந்து அகற்றினர்.
இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

