நாகர்கோவில் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் உயிரிழப்பு

வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில் இன்று(29)அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இன்று அதிகாலை நாகர்கோவில் கடற் பகுதியில் படகுகளை கழுவிக் கொண்டிருந்த வேளை அலையின் சீற்றத்தில் சிக்குண்ட  படகு குறித்த மீனவருக்கு  மேல் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த மீனவர் பருத்தித்துறை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக  மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *