தர்மபுரத்தில் முதியவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம்; மூன்று பேர் கைது

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 22ஆம் திகதி அன்று கல்லாறு பகுதியில் தனிமையில் வசித்து வந்த அந்தோணிப்பிள்ளை ரீற்றா எனும் 71 வயதுடைய முதியவரின் சடலம் ஒன்று கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.

இறந்த முதியவரின் சடலத்தின் பிரேத பரிசோதனையில் இறப்புக்கான காரணம் இனங்காணப்படாத காரணத்தினால் இறந்தவரின் சடலம் புதைக்கப்பட்டது.

இறந்த முதியவரின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கினர். அதற்கு அமைவாக தர்மபுரம் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இறந்த பெண்ணின் பேத்தியாரின் கணவரின் வீட்டிலிருந்து இறந்த முதியவரின் தொலைபேசி மீட்க்கப்பட்டது. அதனை அடுத்து பேத்தியின் கணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்து.

இறந்த முதியவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பிரதான சந்தேக நபர் 22ஆம் திகதி அன்று விசுவமடு பகுதியில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் ஒரு இலட்சத்தி எழுபத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ள பற்றுச்சீட்டினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று முன்தினம்(27) கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *