இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நேரப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி
இலங்கை போக்குவரத்துச்சபை கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி சாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கான எந்த சேவையும் இடம்பெறவில்லை.
வட்டக்கச்சி, உருத்திரபுரம், பூநகரி மற்றும் முழங்காவில் போன்ற பகுதிகளுக்கான பேருந்து சேவைகளும் இடம்பெறவில்லை.
தொடர்ச்சியாக குறித்த பகுதிகளில் நேரம் தொடர்பாக தனியார் பேரூந்துகளுடன் பிரச்சனை ஏற்படுவதாகவும் குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தே அவர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *