சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், இன்று(30) உத்தியோகப்பூர்வமாக தனது தவிசாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில், மௌலவி ஆஷாத்தின் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் முன்னிலையில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


