வேலணை பிரதேச செயலாளராக கடமையாற்றிய கே. சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளராக இன்று(01) மாவட்ட செயலாளர் பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

