மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியடி வெற்றிலை கேணி பகுதியில் இன்று(02) தனியார் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியினை துப்புரவு செய்த பொழுது மண்ணுள் புதையுண்ட நிலையில் யுத்த காலத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் உள்ளதை அவதானித்தார்.
அதன் பின் அக்காணி உரிமையாளரால் மருதங்கேணி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியினைப் பெற்ற பின்னர் அதனை செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மருதங்கணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

