மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த ஒருவர் கைது

மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(03) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்திலும் ஐந்தாம் தரத்திலும் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் சிறு சிறுவர் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை அவதானித்துக் கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் தந்தை ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கு கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான மாணவன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கிய நபரை வாழைச்சேனை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *