பீடி இலைகளுடன் 02 நபர்கள் கடற்படையினரால் கைது

675 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யபட்டனர்.

இலங்கை கடற்படையினர் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி இரவு கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட (675) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் (27, 29) வயதுடைய கல்பிட்டி, ஜனசவிபுர, சிங்கபுர பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேற்கு மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *