விநாயகபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம்

அரசினால் நாடுபூராக உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டமானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் விரிஏ தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

 

இந் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் நிரோஜன் சதாசிவமின் வழிகாட்டலில் தொழிற் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி திலகராஜ் தலைமையில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச உறுப்பினர்கள், விரிஏ பயிற்சி நிலையத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோத்தர்கள், பொதுமக்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் அகற்றப்பட்ட கழிவுப்பொருட்கள் யாவும் திருக்கோவில் பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனம் ஊடாக அப்புறப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *