13 ஆம் நூற்றாண்டில் பொலன்னறுவை இராச்சியத்திற்குப் பிறகு, வன்னிப் பகுதி தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது.
மன்னர் அக்கராயன்களில் ஒருவர் அவர் அக்கராயன் பிரதேசத்தை ஆண்டதாக தெரிவித்து கரைச்சி பிரதேச சபையினால் அக்கராயன் சந்தியில் 2018ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 05ஆம் திகதி சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
அச் சிலை திறந்து வைக்கப்பட்டதைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சிலை வைக்கப்பட்ட தினத்தில் நினைவு நாள் கொண்டாடப்படுவது வழமை.
அந்த வகையில் இன்று நினைவு தின நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.
இந் நினைவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்பு சார்ந்தோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


