கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் : சாய்ந்தமருது வடிகான் சுத்தப்படுத்தல்

சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் வடிகான் அடைத்து மழைநீர் ஓட முடியாது தேங்கி நாற்றம் வீசக் கூடிய நிலை காணப்பட்டது இதனால் பொதுமக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர்.
கல்முனை மாநகர சபையினால் அவர்களின் இயந்திரங்களின் மூலமாக தேசிய மக்கள் சக்தியின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டதின் கீழ்
சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் உள்ள வடிகானை துப்பரவு செய்யும் பணி இன்று (03) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மழை நீர் சீராக வழிந்தோட முடியாது காணப்பட்ட சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் உள்ள வடிகானை சுத்தப்படுத்தியமைக்காக பாடுபட்ட அனைவருக்கும் அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *