திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றம்

இந்துமா சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வங்கக் கடலோரம் தனிக்கோவில் கொண்டு தேடிவரும் நாடிவரும் அருள் வழங்கும் அழகன் குழகன் திருக்கோவில் பிரதேச பதி காவலன் சித்திர வேலன் வரலாற்று பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திருவிழாவும் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்தின் கொடியேற்றமானது பஞ்ச பூதங்களின் ஆசிர்வாதத்துடன் மங்க வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்த அடியவர்களின் விண்ணைப் பிளக்கும் அளவிலான அரோகரா கோஷங்களுடன் இன்று(07) இடம்பெற்றது.

 

மேலும் சித்திரவேலவனின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவமான எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 

மேலும் ஆலயத்திருவிழாக் கால பூசை நிகழ்வுகள் யாவும் ஆலய மஹோட்சவ பிரதம குருக்கள் சிவாச்சாரிய திலகம் ஜோதிட வித்தியாதத்துவ நிதி விபுலமணி சிவஸ்ரீ. சண்முக மகேஸ்வரகுருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 

மேலும் ஆலய நிகழ்வுகள் யாவும் ஆலயத்தலைவர் திரு. சுந்தரலிங்கம் சுரேஷின் தலைமையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *