திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம் திறப்பு

அம்பாறை மாவட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் அப்பிரதேச மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திர சிகிச்சைக்கூடம் அமைக்கப்பட்டு நேற்று(14) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

 

இந் நிகழ்வானது திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத் தலைமையில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினை திறந்து வைத்தார்.

 

மேலும் இந் நிகழ்வில் கல்முனை சுகாதார பணிமனையின் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் சட்டத்தரணி கே. ஜெகசுதன், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வின் போது பிராந்திய பணிப்பாளர் உரை நிகழ்த்துயில்,

 

இந்த சத்திர சிகிச்சைக்கூடமானது சுகாதார அமைச்சினதும் பொதுமக்களினதும் நிதியுதவியின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்

சத்திர சிகிச்சைக் கூடமானது ஆதார வைத்தியசாலையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகக் காணப்படுகிறதுடன் சுகாதார சேவையில் அதன் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *