வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை குடத்தனை பகுதியில் உள்ள மக்கள் பிரதானமாக விவசாயத்தையே தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் இவர்கள் விவசாய நடவெடிக்கைக்காக பயன்படுத்தும் நிலங்களில் இந்த கழிவினை கொட்டுவதாகவும் கூறுகின்றனர்.
இதனால் விவசாய நடவெடிக்கைகளை மேற்கொள்ள இடையூறாக இருப்பதாகவும் அது மட்டுமின்றி எதிர்காலத்தில் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் என்பன முற்றாகவே பாதிப்படையும் வாய்ப்பு உள்ளதாகவும் தமது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்
தாம் அவ்விடத்தில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதால் உக்காத கழிவுகள் இருப்பதால் தொற்றாத நோய்கள் பரவுகின்றன என கூறுகின்றனர்.
இது சம்பந்தமாக சம்பந்தபட்டவர்களிடம் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர்கள் அடாவடித்தனமாக இந்த செயற்பாடுகளை செய்து வருவதாக கூறுகின்றனர்.
ஊர் சார்ந்த பொது அமைப்புகளின் ஊடாக மேல்மட்ட இடங்களிலும் முறைப்பாடு செய்தும் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விசனத்தை தெரிவிக்கின்றனர்.

