இலங்கை மத்திய வங்கி இன்று(24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.5650 ரூபாயாகவும் கொள்வனவு விலை 298.0302 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 416.5045 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 403.3220 ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 361.4404 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 349.5285 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

