இலங்கை மெதடிஸ்த திருச்சபை ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு, திடப்படுத்தல் வழிபாடும்

இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை புனர்நிர்மானம் செய்யப்பட்ட ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு, திடப்படுத்தல் வழிபாடும் எதிர்வரும் சனிக்கிழமையன்று(02) நடைபெறவுள்ளது.

வாழைச்சேனை சேகர முகாமை குரு அருட்கலாநிதி. கே. எஸ். நிசாந்த தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெறும். காலை 8.30. மணிக்கு திருமுழுக்கு வழிபாடும், 9.00 மணிக்கு பவனியும் ஆலய பிரதிஸ்டை வழிபாடும் நடைபெறும்.

பிரதம அதிதிகளாக இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருப்பேரவை தலைவர் அருட்பணி கிங்சிலி வீரசிங்க மற்றும் முன்னாள் திருப்பேரவைத் தலைவர் அருட்பணி டபிள்யு.பெநேசர் ஜோசப் ஆகியோர் கலந்து கொள்வர்.

சிறப்பு அதிதிகளாக வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவைத் தலைவர் அருட்பணி.சாம் சுபேந்திரன் மற்றும் மத்திய மறை மாவட்ட அவைத் தலைவர் அருட்பணி. ஞா.சதீஸ் அன்ரன் ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைப்பதாக இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *