ஹட்டன் செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் வணிக தினம்

ஹட்டன் செனன் தமிழ் மகா வித்தியாலயத்தின் வணிக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக தினம் அண்மையில் அதிபர் திருமதி.கு.விஜயன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஹட்டன் வலயக்கல்விப் பணிமனையின் பிரதிகல்விப் பணிப்பாளர் திருமதி அ.சுமதி மற்றும் கௌரவ விருந்தினராக வணிகதுறை ஆசிரிய ஆலோசகர் கு.சாரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *