பிரதமர் நல்லூர் கந்தன் ஆலயத்தை தரிசிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று(03) வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ச. சிறீபவானந்தராஜா, மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் உள்ளிட்ட பலரும் இதன்போது இணைந்திருந்தனர்.

நல்லூர் ஆலய வெளி வீதியில் காணப்பட்ட மணல் சிற்பத்தை வியந்து பார்த்து பிரதமர் பராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *