யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் ஆராய்வு

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக இன்று(03) பிரதமர் ஹரினி கலந்துரையாட கிளிநொச்சி வளாகத்திற்கு பிற்பகல் 12 மணியளவில் வருகை தந்தார்.

பின் வருகை தந்த பிரதமர் வளாகத்தின் பீடாதிபதிகள் துறைசார் நிறுவனர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் பல்கலைக்கழகத்தின் தேவைகள் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடியதைத் தொடர்ந்து அதற்கான தீர்வுகள் பற்றியும் கூறி அதனை உடனடியாக செய்து தருவதாகவும் கூறிச் சென்றார்.

இக் கலந்துரையாடலில் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *