கடினப்பந்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்ற வடமாகாண அணி வீரர்களுக்கு வரவேற்பு

49வது தேசிய விளையாட்டு விழாவில் கடினப்பந்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்ற வடமாகாண அணி வீரர்களுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையின் 49வது தேசிய விளையாட்டு விழாவுக்கான தேசிய போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் வரலாற்றில் முதல் தடவையாக வடமாகாண அணி மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

குறித்த வடமாகாண அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் 12 பேரும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 02 வீரர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 01வீரரும் அணியில் இடம்பிடித்திருந்தனர்.
இவ் வீரர்களை வரவேற்கும் நிகழ்வு கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து மத்திய கல்லூரி வரை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *