தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் ஏ 35 பிரதான வீதியின் ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் அதே திசையில் இருந்து பயணித்த மற்றுமொரு பெண் செலுத்திய மோட்டார் சைக்கிளும் வீதியை குறுக்கெடுத்து செல்ல முற்பட்ட வேளை ஏற்பட்ட வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

