கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான ஒருவர் உயிரிழப்பு 

நேற்றிரவு(06) கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ9 வீதி கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சுகாதார அமைச்சுக்குப் சொந்தமான கப்ரக வாகனம் வீதியைக் கடக்க முற்பட்டவர் மீது மோதியதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் 55வயதான திருகோணமலையைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *