உடையார்கட்டு சந்தை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் றோய்ஸ்ரன் றோய் தலைமையில் சுகாதார பரிசோதகர்கள் சந்திரமோகன், கோகுலன், சுரேசானந்தன் ஆகியோர் பரிசோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
சந்தைபகுதிக்குள் அமைந்துள்ள மாட்டிறைச்சி கடையில் விற்பனை செய்ய தயாராக இருந்த மாட்டிறைச்சி தொடர்பில் சந்தேகமடைந்த பொது சுகாதார பரிசோதகர்கள் கடையினை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.
இதன்போது கொல்களத்தில் வெட்டியமைக்கான கொல்கள் பற்றுச்சீட்டு இல்லாதமையை அவதானித்த பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் றோய், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 36kg இறைச்சியினை கைப்பற்றினார்.
தொடர்ந்து இறைச்சி கடை உரிமையாளரை விசாரணை செய்ததில் மாட்டிறைச்சி சட்டவிரோதமாக வெட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சி 36kg பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் றோய் மற்றும் குழுவினரால் அழிக்கப்பட்டது.

