தேசிய புலனாய்வு சேவை பிரிவு உத்தியோகத்தர் சிஜடி கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்தை சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய மட்டு கரடியனாறு தேசிய புலனாய்வுத்துறை சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சிஜடி யினர் கொழும்பில் வைத்து  நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (08) கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன் நிரோசன் இந்திர பிரசன்னா, மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் டினேஸ் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து அவர்களின் கைது துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த அஜந்தன் பாலித்து வந்த ஜக்கட்  பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அறிக்கையிட்டதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை  கொழும்பிலுள்ள சிஜடி நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் 2019 ஏப்பிரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ்; பயங்கரவாத அமைப்பின் ஸாரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் ஸாரானின் சாரதியான முகமது சர்pப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ். நில்காம் 4 பேரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்.

இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைக்பற்றியதையடுத்து இந்த உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிசார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனா.;

இதனுடன் தொடர்புபட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிவரும் தேசிய புலனாய்வு சேவையைச் சேர்ந்த  இருவரையும் சிஜடி யினர் வரவழைத்து அவர்களிடம்   விசாரணையை முன்னெடுத்த நிலையில்  மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை நேற்று செவ்வாய்க்கிழமை (8) கொழும்புக்கு வரவழைத்த சிஜடி அவரை அங்குவைத்து கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *