மேஷம்:
காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களி டம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்:
தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும்
மிதுனம்:
முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது
கடகம்:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
சிம்மம்:
தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பார்கள். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
கன்னி:
சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவி னர்கள் மூலம் கிடைக்கும் செய்தி அளவற்ற மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
துலாம்:
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விருச்சிகம்:
மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதன் காரண மாக உடல் அசதி ஏற்படும்.
தனுசு:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நி யோன்யம் அதிகரிக்கும்.
மகரம்:
சகோதரர்களால் சில சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சிலருக்கு தந்தை யிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
கும்பம்:
மகிழ்ச்சியான நாள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பண லாபம் உண்டாகும். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். சகோதர வகையில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
மீனம்:
புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச் னைகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.