இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் நீக்கம்

திரு. அலன் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அலன் Alan என்று அழைக்கப்படும் திரு. அலன்டீலன் கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 மாணவர்களுக்கு எதிராக இடம் பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் அங்கத்தவரான இவர் குற்றச்சாட்டின் பாரதூர தன்மையை கருத்திற் கொண்டு உடனடியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *