மட்டக்களப்பில் 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட சிறுவர் சபைக்கான கூட்டமானது மாவட்ட சிறுவர் சபை தலைவர் சி.தேவருபன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (17) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அராங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
பிரதேச சிறுவர் சபைகளை பலப்படுத்தும் நோக்கில் அதற்கு நிதி உதவிகளை வழங்கி அவர்களை நிதியை கையாளுவதன் ஊடாக எதிர்காலத்தில் லஞ்ச ஊழலற்ற சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந் நிகழ்வின் போது மாவட்டத்தில் உள்ள பிரதே செயலக பிரிவுகளில் செயற்பட்டு வரும் சிறுவர் சபைக்கு 40,000 பெறுமதியான காசோலைகள் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டன.
இவ் காசோலை நிதியின் மூலம் சிறுவர் கழகங்களானது பிரதேசத்தில் “ஒரு விளையாட்டின் ஊடாக விருத்தி ” என்ற திட்டத்தின் கீழே பிள்ளைகள் அனைவரும் பங்கு பற்றி தங்களது உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன்,மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி. மதிராஜ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர் சபை தலைவர்,செயலாளர்கள் பொருளாளர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்விற்கான அனுசரனை ஏ. யு லங்கா நிறுவனமும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், மற்றும் மாவட்ட சிறுவர் சபைகளை பலப்படுத்துவதற்கான நிதியினை செரி நிறுவனம் வழங்கியிருத்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மாவட்ட சிறுவர் சபை உறுப்பினர்களின் அனுபவ பகிர்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்..

