தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சாவித்திரி சரோஜா போல்ராஜ் நேற்று(16) அக்கரைப்பற்று விபுலானந்தர் இல்லத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்ட அதேவேளை நேற்று அக்கரைப்பற்று விபுலானந்தர் இல்லத்திற்கும் வருகை தந்திருந்தார்.
இங்குள்ள விபுலாந்தர் சிறுவர் இல்ல நூலகத்தைத் திறந்து வைத்ததுடன் சிறுவர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டார்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் லசந்த பீரிஸ், தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபூபக்கர் ஆதம்பாவா, தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து ரத்வத்த ஆகியோரும் இவ் விஜயத்தின் போது வருகை தந்தனர்.
இறைபணிச்செம்மல் கைலாயபிள்ளையால் அமைச்சர் சாவித்திரி சரோஜாதேவி போல்ராஜ்க்கு எழுதிய வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலயத் தலைவர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்கதியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


