மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ; தன்மன்பிள்ளை கனகசபை நேற்று (19) உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்த 86 வது வயதான இவர்.1939.03.20 ஆம் திகதி பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

