ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலய மாணவன் 17வது தேசிய மாணவச் சிப்பாய் படையணியின் (சிகியூஎம்எஸ்) ஆன ஸராபத் இஸ்னி கடெற் துறையில் சி.எஸ்.எம். (வொரன்டி ஒப்பிஸர்- II) இனை பெற்று பாடசாலைக்கும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் புதிதாக பதவி உயர்வு பெற்ற ஏ. எம். அர்கம் மற்றும் எம். எஸ்.எம். கிப்பான் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான பதவி உயர்வு நிகழ்வு சென்ற வாரம், அம்பாறையில் அமைந்துள்ள 17 வது படைப்பிரிவின் தலைமைக் காரியாலயத்தில் கட்டளையிடும் அதிகாரியின் தலைமையில் இடம்பெற்றது.
இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று(28) பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் யு.கே. அப்துர் ரஹீம் தலைமையில் நடைபெற்றது.
இவர்களது வெற்றிக்காக உழைத்த பாடசாலையின் கெடெற் பிரிவுக்கு பொறுப்பான பிளட்டூன் கொமாண்டர் லெப்டினென்ட் ஏ.எம்.எம். கியாஸ், பயிற்சியை வழங்கி வரும் பொலிஸ் இன்ஸ்டக்டர் எம். சுதர்சன் ஆகியோருக்கும் இணைப் பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஜே. வஹாப்தீன் உட்பட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் ஆர். நெளஸாத், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ. அஸ்மத் ஸஹி அனைவருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.


